இன்றைய நவீன யுகத்தில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முகநூல், ரீல்ஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அதிகளவு பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில், நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அந்தவகையில் சமீபத்தில் சிறுவன் ஒருவனை அவனது உறவினரே மது குடிக்க செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு புகார்கள் சென்றன. இந்த வீடியோவை பார்த்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டது, திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூரை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜீத்குமார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அஜீத்குமாரை காணக்கிளியநல்லூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.