Rock Fort Times
Online News

திருச்சி தேசியக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு !

தேசியக் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு நூலக கல்விக் குழுவும் திருச்சி
தேசிய கல்லூரி நூலக துறையும் இணைந்து டிஜிட்டல்
உலகத்தை கட்டமைப்பதில் டிஜிட்டல் நூலகத்தின் பங்கு
என்ற தேசிய கருத்தரங்கு
நடைபெற்றது. விழாவில் தேசிய கல்லூரி நூலகர் முனைவர் சுரேஷ் குமார் வரவேற்றார்.
இக்கல்லூரி
முதல்வர் முனைவர் குமார் தலைமை
வகித்து பேசினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் திருவள்ளுவன்
கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழக நூலக முனைவர்
நாகராஜன் தேசியக் கல்லூரியின் மேனாள் நூலகர்
முனைவர் ராகவன், திருச்சி தூய வளனார் கல்லூரி நூலகர்முனைவர் துரைராஜன் ஆகியோருக்கு நூலக கல்விக்
குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
தேர்வு நெறியாளர் முனைவர் ஸ்ரீனிவாச ராகவன்
தன் வாழ்த்திபேசினார்.
நூலக கல்வி குழும தலைவர் முனைவர்
சரவணகுமார் நன்றி கூறினார்.
கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்
இளவரசு, முனைவர் பிரசன்ன பாலாஜி, துறை தலைவர்கள்
பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர்புவனேஸ்வரி தேசிய கருத்தரங்கின் நிகழ்வுகளை தொகுத்து
வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்குகள்
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு
கட்டுரைகளை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்