பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை கோவை இடையே வந்தே பாரத் சேவையை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
பின்னர் சென்னை – மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சாலை வழியாக மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், அங்கு உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவேகானந்தரின் முழு உருவச் சிலையை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். முன்னதாக, விவேகானந்தர் இல்லத்திற்கு சென்றவுடன், அங்கு வைக்கப்பட்டு இருந்த விவேகானந்தர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர். என். ரவி மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கு மோடி வந்திருக்கும் நிலையில் பாஜகவின் மாநில செயலாளர் அண்ணாமலை மோடியை வரவேற்கவும் வரவில்லை மோடி பங்கேற்ற எந்த நிகழ்விலும் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
