பெரியார் குறித்த சர்ச்சை – சீமானுக்கு எதிராக இறுகும் பிடி ! ஸ்ரீரங்கம் , மணப்பாறை உட்பட 60 இடங்களில் வழக்குப்பதிவு !
பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து சர்க்கைக்குரிய கருத்துகளை பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகம், திமுக, த.பெ.தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளித்துள்ளன. அதன்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 வழக்குகள் சீமானுக்கு எதிராக பதிவு செய்யபப்ட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் திருவரங்கம், மணப்பாறை ஆகிய காவல் நிலையங்களிலும் கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
Comments are closed.