திருச்சி, கே.கே.நகர் சுந்தர்நகர் பிரதான சாலை மற்றும் அப்பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், கழிவு நீர் செல்வதை சரி செய்யக் கோரியும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று(08-01-2025) திடீரென சுந்தர்நகர் பிரதான சாலையில் உள்ள பெரியார் மணியம்மை பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்காத பொதுமக்கள் உடனடியாக சரி செய்து தரக்கோரி போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னர், சுந்தர் நகர் பகுதியில் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 962
Comments are closed.