திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் தொடக்கம் ! குறைகள் இருப்பின் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு
திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற இன்று காலை முதல் டோக்கன் வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பை பொதுமக்கள் சிரமமின்றி பெற ஏதுவாக ஒவ்வொரு ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் பணி இன்று காலை 8 மணி முதல் துங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 8 லட்சத்து 33 ஆயிரத்து 131 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் என எட்டு லட்சத்து 34 ஆயிரத்திற்கு மேற்பட்ட 99,291 கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவர் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் எதுவாக இருந்தாலும் உணவுப் பொருள் வழங்கல் தனி வட்டாசியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

Comments are closed.