எடப்பாடியை ஆதரிக்கக் கூடிய கட்சிகள் மக்கள் மன்றத்தில் நிராகரிக்கப்படும் என நமது அம்மா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருது அழகுராஜ், “அ.தி.மு.க-வின் சட்ட விதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே கட்சியின் பொதுச்செயலாளராக ஆக முடியும். இதற்கு முன்பு புரட்சித்தலைவியும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் தாங்கள் மறைகின்றவரை கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்தனர். அதற்கு காரணம் அவர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டதுதான்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு கொடுத்த அந்த உரிமையை எடப்பாடி பழனிசாமி தட்டிப்பறித்துக் கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அபகரிப்பு அரசியலை பா.ஜ.க ஆதரிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம். பா.ஜ.க மட்டுமல்ல எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கும் இதே வேண்டுகோளை விடுக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னியரசோ, பா.ம.க-வை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்களோ அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?. அதனால் அபகரிப்பு எந்த நிலையில் வந்தாலும் அதனை நிராகரிக்க வேண்டும். கண்டிக்கப்பட வேண்டும் என வேண்டுகிறோம். அப்படி எடப்பாடியை ஆதரிக்க கூடிய கட்சிகள் மக்கள் மன்றத்தில் நிராகரிக்கப்படும். நாங்களும் சும்மா விடமாட்டோம்” என்றார்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded