ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் எப்போது ? திருச்சியில் அமைச்சர் சேகர்பாபு பதில் !
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கியமானதும், பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 542 கிலோ தங்க நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி இன்று ( டிச.27 ) சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, கே. ரவிச்சந்திர பாபு, மாலதி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் கே.என் நேரு பி.கே சேகர்பாபு ஆகியோர் தங்க நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு., கோவிலுக்கு தேவையான தங்கத்தை தவிர மீதமுள்ள தங்க நகைகளை முதலீடு செய்யும் நோக்கத்தில் தங்க பத்திர திட்டத்தில் நகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.என்றார்.தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் அறங்காவலர் குழு எப்போது நியமிக்கப்படும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Comments are closed.