Rock Fort Times
Online News

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது! – போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவரும். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ( டிச.23 ) இரவு உணவு அருந்திய பின், இருவரும் நடை பயிற்சி சென்றுள்ளனர். அங்கு ஒரு மறைவான இடத்துக்கு சென்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இருவர்,மாணவரை அடித்து விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி, நேற்று இரவு கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பெயரில் ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது, மேலும் இந்த நபர் இது போன்று பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், சில ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்