டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க திருச்சி தேசியக் கல்லூரியில் பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவி சாராஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தன்று டெல்லியில் மத்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். இதில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியரின் அணிவகுப்பும் இடம் பெறும். 2025 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 -ம் நாள் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவியரின் தேர்வு பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில், திருச்சி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் பயிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவி சாராஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வருகிற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளார். குடியரசு தின விழா அணிவகுப்பில் கடந்த 11 ஆண்டுகளாக, தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இந்த ஆண்டும் தேசியக் கல்லூரியின் மாணவி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ள மாணவி சாராஸ்ரீ- ஐ கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார், செயலர் கா.ரகுநாதன் மற்றும் பேராசிரியர்கள் சக மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
Comments are closed.