மணப்பாறை அருகே “லிப்ட்” கேட்டு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உட்பட 3 பேர் கார் மோதியதில் படுகாயம்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மினிக்கியூரைச் சேர்ந்தவர்கள் நவீன் குமார், கலைச்செல்வன். இருவரும் கோவில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் இன்று(12-12-2024) காலை பள்ளிக்கு புறப்பட்டனர். அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் “லிப்ட்” கேட்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர். மினிக்கியூர் பிரிவு சாலை அருகே மூவரும் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.