திமுக “ஊழல் பைல்-3” விரைவில் வெளியிடப்படும், அதில் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர் குறித்தும் இருக்கும் – திருச்சியில் பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை…!
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குகிற வேளையில், திமுக ஊழல் பைல்- 3 விரைவில் வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு தமிழக அரசு அமல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள். அப்படி கிடைக்காவிட்டால், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள். ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?. டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வருகிற 12ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடியுள்ளார். டாஸ்மாக் பிரச்சனைக்காக அவர் பதவி விலக வேண்டும். விருதுநகரில் எஸ்எஸ்ஐ மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தமிழகம் முழுவதும் போலீசார் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ள தை எடுத்துக்காட்டுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்புலிகள் பல்வேறு பழிவாங்கும் படுகொலைகளை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது. எனவே, இலங்கையிலும், இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் பாஜக எழுச்சி கண்டுள்ளது. இவர் அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், பொதுச் செயலாளர் ஒண்டிமுத்து, பெரம்பலூர் பார்வையாளர் இல.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.