ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் செல்லாக்காசுகள்- திருச்சி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பரபரப்பு பேச்சு…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று(19-11-2024) மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், அலைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர்கள் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.
முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா பேசுகையில் , வசதி படைத்த ஒரு அமைச்சர் திருச்சியில் இருந்து வருகிறார். அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கு பூத் வாரியாக பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல் பெண்களை பங்கெடுக்கச் செய்ய வேண்டும். கடினமாக உழைத்தால் வெற்றி
எளிது என்று பேசினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், தமிழகத்தில் 4ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பான ஆட்சியை தந்தார், எடப்பாடி பழனிசாமி. அம்மாவை வெற்றி பெற செய்து அதிமுக கோட்டையாக இருந்தது திருச்சி. இதனை மீண்டும் நிரூபிக்க கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த புரட்சி தலைவருக்கும், புரட்சி தலைவிக்கும் நன்றிக்கடனாக, வருகிற 2026 தேர்தலில் அதிமுக வை வெற்றிபெறச்செய்யுங்கள். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி எதிரணியினர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்கு விகிதம் உயர்ந்துள்ளது. திமுகவின் வாக்கு விகிதம் குறைந்து விட்டது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனை மனதில் கொண்டு சட்டமன்ற தேர்தலில் உழைத்து அதிமுக வை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்றார். அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஒரு முதல்வர் பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவருகிறார். திமுக அரசின் சாதனைகளை பட்டியலிடட்டும் என்னுடன் விவாதிக்க தயாரா? என எடப்பாடியார் கேட்டதற்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. தேனியில் தோல்வியுற்றவர் டி.டி.வி. எடப்பாடியார் கட்சியை ஒழித்துவிடுவார் என்கிறார். டி.டி.வி என்ன ஜோதிடரா? நிறைய கொள்ளையடித்து அறக்கட்டளை பேரில் பணம் வைத்திருக்கிறார்கள். லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்ற செந்தில்பாலாஜிக்கு வெட்கமே இல்லாமல் முதல்வர் வரவேற்பு கொடுக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி தினகரன் செல்லாக் காசுகள்.இவர்களை அதிமுகவினர் அனைவரும் புறந்தள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமி மாபெரும் சக்தியாக உருவெடுத்துவிட்டார். இனி யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, மகளிர் அணி செயலாளர் நசிமாபாரிக், இலக்கிய அணி பாலாஜி, ஜான் எட்வர்ட், அப்பாஸ், ஏடிபி ராஜேந்திரன்,
இலியாஸ், கலிலுல் ரகுமான், வக்கீல் ராஜேந்திரன், சகாபுதீன், ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் ஜெரால்டு, கலிலுல் ரகுமான், மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர் , நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி , கலைவாணன், வெல்லமண்டி சண்முகம், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், சேது மாதவன்,ஜெயராமன், தாமரைச்செல்வன், கங்கை மணி, நிர்வாகிகள் ரஜினிகாந்த், புத்தூர் சதிஷ், எனர்ஜி அப்துல் ரகுமான், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், கருமண்டபம் சுரேந்தர், தில்லை விஸ்வா, வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், குருமூர்த்தி, நத்தர்ஷா, டிபன்கடை கார்த்திகேயன், உறையூர் சாதிக், உறந்தை மணிமொழியன், தர்கா காஜா, அப்பா குட்டி, காசிபாளையம் சுரேஷ்குமார், பத்மா பிரிண்டர்ஸ் புகழேந்தி, அக்பர் அலி, கிராப்பட்டி கமலஹாசன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், சீனிவாசன், ஆர்.செபா, உடையான்பட்டி செல்வம், கே.டி. அன்புரோஸ், கே.டி. ஏ ஆனந்தராஜ், டைமன் தாமோதரன், தர்கா காஜா, பொன். அகிலாண்டம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.