Rock Fort Times
Online News

திருச்சியில் வருகிற 19-ந் தேதி மத்திய, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கிறார்…!

திருச்சியில் வருகிற 19-ந் தேதி மத்திய, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடக்கிறது. இதுதொடர்பாக திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணியளவில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நடைபெறவிருக்கின்றது. கூட்டத்தில் வருகிற 23 -ந் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், துறையூரில் முத்தமிழ்அறிஞர் கலைஞர் சிலை திறப்புவிழா, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் புதிய அலுவலக திறப்பு விழா, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் பணிகளுக்கு நடைபெறும் வாக்குசாவடி முகாம்களில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றுவது, கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்