Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் குடிநீர் குழாய் குடமுருட்டி அருகே உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக புகழ் நகர், பாரி நகர், எல்லக்குடி, சந்தோஷ் நகர், ஆலத்தூர், கணேஷ் நகர் மற்றும் காவேரி நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இன்று (16.11.2024) மற்றும் நாளை 17.11.2014 ஆகிய 2 நாட்கள் இருக்காது.  18ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்