Rock Fort Times
Online News

திருச்சி ஜீயபுரம் அருகே இளைஞர் படுகொலை ! மருத்துவர்கள் மற்றும் போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் !(வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் விஷ்ணு (வயது 24). இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார்.  இந்நிலையில் திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரில் ஒருவர், பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளி விட்டுள்ளார்.பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் விஷ்ணு தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த  கொலை சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்றவர்களைதேடி வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மோப்பநாயுடன் சோதனை செய்தனர்.மேலும் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்., கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோகுல் என்ற நபரை விஷ்ணு தொடர்புடைய கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணு கடந்த வாரம்தான் ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில், இவரை நோட்டமிட்ட கும்பல் இன்று பழிக்குப்பழியாக இக்கொலையை செய்திருக்கிறது. இருந்தபோதிலும் கொலைக்கான வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அருகே பட்டப்பகலில் பஸ்சில் பயணம் செய்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு அருவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் ஜீயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  இந்நிலையில் கொலை செய்யப்பட்ட விஷ்ணு உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறையை கண்டித்தும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலையை மறித்து விஷ்ணுவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்