Rock Fort Times
Online News

லாட்டரி மார்ட்டின் வீடு, நிறுவனங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின்.  பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.இவர் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பலவேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது  மாரட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு மே மற்றும் அகடோபர் மாதத்தில் கோவையில் உள்ள மார்ட்டின் மற்றும் அவருடைய மருமகள், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று மார்ட்டின் வீடு மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவிற்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இன்று இரண்டாவது நானாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனைகள் முழுமை அடைந்த பின்னர் என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்ற அதிகாரப்பூர்வ தகவலை அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்