இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறுகிறது. அதன்படி திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி ஆகிய 4 கோட்டாட்சியரகங்கள், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, துறையூர், தொட்டியம், மருங்காபுரி ஆகிய 11 வட்டாட்சியரகங்களிலும் முகாம் நடைபெறும். மேலும் மாநகராட்சிக்குள்பட்டமாநகராட்சி ஆணையரகம், மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 2,543 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும். தகுதியான வாக்காளர்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.