அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(14-11-2024) மாலை திருச்சி வருகிறார். இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில், விமான நிலையத்தில் எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தி.மு.கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர விருக்கின்றார். அவருக்கு விமான நிலையத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதல்படி திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகின்றது. இதில், திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து முதல்வருக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்திட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.