Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் நாளை 14-ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இன்று (13.11.2024) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, இபி காலனி, காஜாமலை, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், வி.என். நகர், தென்றல் நகர், கவிபாரதிநகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர், அரியமங்கலம், மலையப்பநகர், ரயில்நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை செக்ஸன் ஆபிஸ், நாகம்மைவீதி, பொன்னேரிபுரம், அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், எல் ஐ சி காலனி, கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்நகர், சுப்ரமணிய நகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , திருவானைக்காவல், உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர் , புத்தூர் ஆனந்தம் நகர் மற்றும் ரெயின்போ நகர் ஆகிய பகுதிகளில் நாளை (14.11.2024) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது. மறுநாள் (15.11.2024) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்