Rock Fort Times
Online News

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு பகுதிகளில் 12-ம் தேதி மின்தடை…!

திருச்சி மெயின்கார்டுகேட் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 12-ம் தேதி( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதன் காரணமாக கரூர் புறவழிச்சாலை, பழைய கரூர் சாலை, வி.என். நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோயில் தெரு, சிதம்பரம் மஹால் பகுதி, பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு, உறையூர் அரசு குடியிருப்பு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கர் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்திரன்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம் மற்றும் திருச்செந்துறை, கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை நீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்காரபாளையம், அரியமங்கலம், பனையக்குறிச்சி, முல்லகுடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர், திருவானைக்காவல், அம்மா மண்டபம், நெல்சன் சாலை ஆகிய பகுதிகளில் 12ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்