Rock Fort Times
Online News

திருச்சி அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் சகோதரி படத்திறப்பு நிகழ்ச்சி – எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்..!

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் இன்று(10-11-2024) பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று சேலத்தில் இருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி வந்தடைகிறார். இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசனின் உடன்பிறந்த சகோதரி எஸ்.கெஜலட்சுமி கடந்த 3 -11-2024 ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது பட திறப்பு நிகழ்ச்சி இன்று (10-11-2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் திருச்சி பாலக்கரை எடத்தெருவில் உள்ள ஜெ.சீனிவாசன் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் கார் மூலம், திருச்சி விமான நிலையம் சென்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்