Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்- இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்…!

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  14_ வது வார்டு, டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக  அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 142 மாணவிகளுக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி நிர்மலா, மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதி செயலாளர் மருந்து கடை மோகன், மாமன்ற உறுப்பினர்கள் சாதிக்பாஷா, எல்.ஐ.சி. சங்கர், வட்டச் செயலாளர் உதயா ரபிக், இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதேபோன்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18_வது வார்டில் அமைந்துள்ள அரசு வைக்கவுண்ட்ஸ் கோஷன் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை இனிகோ இருதயராஜ் எம். எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு, மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா, பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் தலைவர் காஜா மொய்தீன், செயலாளர் முகமது பால், பொருளாளர் அப்துல் சமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்