திருச்சியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நவீன கருவிகளுடன் போலீசார் தீவிர சோதனை…! (படங்கள் இணைப்பு)
திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி பள்ளி, ஹோலி கிராஸ், சந்தான வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு இன்று(5-11-2024) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக விமானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது, பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் விமான பயணிகள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆகவே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
Comments are closed.