Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து…!

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி- பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சேலம் கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளால் மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயிலானது (16811) வருகிற 3, 9, 10, 16, 17, 23, 24, 30 ம் தேதிகளில் சேலம்- கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மயிலாடுதுறை – கரூர் இடையே மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக, சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16812) வருகிற 3, 9, 10, 16, 17, 23, 24, 30 ஆம் தேதிகளில் சேலம் – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூர்- மயிலாடுதுறை இடையே மட்டும் இயங்கும். மேலும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயிலானது (16843) வருகிற 4,8 ஆம் தேதிகளில் பாலக்காடு திருப்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி – திருப்பூர் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் வருகிற 11, 15, 16, 18 22, 24, 25, 29, 30 ஆம் தேதிகளில் பாலக்காடு – சூலூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி – சூலூர் இடையே மட்டும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்