ஓசூரில், தனியார் பள்ளி மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் – அதிர்ச்சி சம்பவம் …! ( வீடியோ இணைப்பு)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி மீது ஆசிரியர் சரமாரி தாக்குதல் நடத்தினார். உடற்கல்வி ஆசிரியர், அந்த மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியான நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.