திருச்சி, ஸ்ரீரங்கம் மலையப்பநகரில் துர்க்கை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கமிட்டி தலைவராக மலையப்ப நகரை சேர்ந்த ராஜேந்திரன் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் அம்மன் சிலையில் இருந்த தாலி திருட்டு போய்விட்டதாக பூசாரி வெங்கடேசன், கமிட்டி தலைவர் ராஜேந்திரனிடம் கூறினார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சை கோடீஸ்வரன் மேலத்தெருவை சேர்ந்த ராமன் மகன் கண்ணன் என்பவர் அம்மன் தாலியை திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அம்மன் தாலி மற்றும் தாலி குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Comments are closed.