தமிழக வெற்றிக்கழகத்தின் திருச்சி நிர்வாகி வி.எல்.சீனிவாசன் உட்பட 2 பேர் சாலை விபத்தில் பலி ! ( வீடியோ இணைப்பு)
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று(27-10-2024) மாலை நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி தலைவர் வழக்கறிஞர் வி.எல்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இதில் காரில் சென்ற 7 நபர்களில் இரண்டு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சின்ன செட்டி தெருவை சேர்ந்த கலை ஆகிய இருவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வந்தவர் விஎல் சீனிவாசன். ஆற்றல் மிகுந்தவர். கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய் மீது மாறாத பற்று கொண்டவர். அவரது இழப்பு திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு என்றால் அது மிகையில்லை.
Comments are closed.