சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது திருச்சி மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் சுமார் இரண்டு அடி நீள வீச்சரிவாளுடன் திருச்சி உறையூரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சரண் என்கிற சரண்ராஜ் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் உறையூர் கடைவீதியில் வீச்சரிவாளுடன் சென்று வழிப்பறி செய்த சரண்ராஜை, ஆய்வாளர் ராமராஜ் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், சரண்ராஜிடம் இருந்த வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.

Comments are closed.