திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, வேளாங்கண்ணி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் இன்று(30-09-2024) அதிகாலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுகாதாரமாக இருக்கிறதா? என்று உள்ளே சென்று பார்வையிட்டார். மேலும், கழிவறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபாதையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் வினோத் கண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.