5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர்கள் அய்க்கப் பேரவையின் சார்பில், திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே மாவட்ட பேரவை செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன் சிறப்புரையாற்றினார். இதில் , அரசு ஊழியர் அய்க்கப் பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ரவிக்குமார், ஜெய்சங்கர், செந்தில்குமார், பாக்கியராஜ், மாநில துணை செயலாளர்கள் கணேச.பழனிவேல், ராஜா, செல்வகுமார், மற்றும் திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், பெல் தொழிற்சங்க பொதுச் செயலாளர் விஜயபாலு, மாவட்ட நிதி செயலாளர் மருகரை கண்ணதாசன், திருவெறும்பூர் வட்ட பேரவை தலைவர் சந்திரகுமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பட்டியல் பழங்குடி வகுப்பு அரசு பணியாளர்கள், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடைக்க இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 16 (4)Aபயன்படுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு துறைகளில், பட்டியல் பழங்குடியினருக்கு வழங்க வேண்டிய காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மை பணிகள் அனைத்தும் வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர் அய்க்கப் பேரவைக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்கி பேரவைக்கு தலைமை அலுவலகம் சென்னையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments are closed.