தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டனர், அரசு பள்ளிகளில் தரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் ‘பகீர்’…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் குறைந்து விட்டதாக மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின், பெத்தபெட்டமைன் பயன்பாடு அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறைந்து விட்டதாகவும், கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அரசு பள்ளிகளின் தரம் குறைந்து 70 சதவீத மாணவர்களால் எண்களையும், 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளையும் படிக்க முடியவில்லை” என்றார். அவரது இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Comments are closed.