முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பிரபல தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் கணக்கு வைத்துள்ளனர். இவர்களில் உயர் அதிகாரிகள் பெயரில் ஒரு கும்பல் போலி கணக்குகளை தொடங்கி தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பெயரில் போலி முகநூல் கணக்கை ஒருவர் துவங்கி அதன்மூலம் பலரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், இது போலி முகநூல் கணக்கு.என்னுடையது அல்ல, யாரும் ஏமாற வேண்டாம் என தெளிவுபடுத்தி உள்ளார். இது போன்று ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் போலி கணக்குகளை துவங்கி அதன்மூலம் பணம் பறிக்கும் செயலை சிலர் செய்து வருகின்றனர். இதனை அறியாமல் சிலர் அப்பக்கத்தில் இணைவதும், உதவிகள் செய்வதும் பதிலளிப்பதும் அரங்கேறி வருகிறது. திருச்சி மாவட்ட கலெக்டரின் பெயரில் அக்கவுண்ட்டை ஓபன் பண்ணி அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி மோசடி செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.