வழிப்பறியில் ஈடுபட்ட மாணவனுக்கு நூதன தண்டனை: 15 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய நீதிமன்றம் உத்தரவு…! (வீடியோ இணைப்பு)
கோவை மாவட்டம், துடியலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 17 வயது சிறுவன் வழிப்பறியில் ஈடுபட்டான்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிறுவன் கைது செய்யப்பட்டு கோவை மாவட்டம் இளைஞர் நீதிக்குழும முதன்மை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டான். அந்த சிறுவன் ஐ.டி.ஐ. படித்து வந்தான். எனவே, சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 15 நாட்கள் தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, அந்த சிறுவன் திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னலில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து காலை முதல் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டான். அவனுக்கு போக்குவரத்து விதிமுறைகள்,
விதி மீறல்கள் குறித்தும், போக்குவரத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது குறித்தும் போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன் தகுந்த ஆலோசனை கூறினார். மாணவனுக்கு விதிக்கப்பட்ட நூதன தண்டனை அனைவராலும் வியப்பாக பார்க்கப்படுகிறது.
Comments are closed.