Rock Fort Times
Online News

திருச்சியில் தின்னர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் அதே பகுதியில் ஆலம் தெருவில் வர்ணம் பூச்சுக்கு பயன்படுத்தும் தின்னர் என்ற திரவம் தயாரிக்கும் சிறிய அளவில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.  வழக்கம்போல பணி முடிந்ததும் நேற்று இரவு தொழிற்சாலையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது இரவு நேரத்தில் அந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில், நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில்  2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக பாலக்கரை போலீஸார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தின்னர் தயாரிப்பதற்காக மூன்று பேரல்களில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் தீ பற்றி பேரல் வெடித்ததால் தீ வேகமாக பரவியது தெரிய வந்தது.  இதுகுறித்து கமாலுதீனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்