ஓசூர் அருகே கிராமப்பகுதியில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள் : நிழலுக்காக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு; ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் பகுதியில் சுற்றித்திரிந்தது. இந்த காட்டு யானைகள் நேற்று கர்நாடக மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள குமாரணப்பள்ளி, சூடகொண்டப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றி வந்தது. இந்த நிலையில் இன்று இந்த 5 காட்டு யானைகளும் அங்கிருந்து இடம்பெயர்ந்து சூதாளம் கிராமத்திற்குள் சென்றுள்ளது. தற்போது சூதாளம் கிராமத்தில் விவசாய நிலங்கள் அருகே 5 காட்டு யானைகளும் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று 5 காட்டு யானைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காட்டு யானைகள் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் காட்டு யானைகளை பார்க்க அப்பகுதியில் திரண்டனர். 5 காட்டு யானைகளும் தொடர்ந்து அங்குள்ள மரங்களுக்கு இடையே முகாமிட்டுள்ளது. இதனை மாலை நேரத்தில் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடைய ஒன்றன் பின் ஒன்றாக யானைகள் வந்துக் கொண்டிருந்த நிலையில் முன்னால் வந்த யானை நிழலுக்காக மரத்தின் கீழ் நின்றது. பின்னால் வந்த யானைகள் இந்த யானையை மோதி விட்டு நிழலுக்கு நின்றது. சிறிது நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதியதால் அச்சம் ஏற்பட்டது.
பொது மக்கள், வன துறையினர் சத்தமிட்ட நிலையில் அமைதியான யானைகள் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனிடையே கிராமப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சூதாளம், சூடகொண்டப்பள்ளி, மஞ்சளகிரி, ஜோதிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded