Rock Fort Times
Online News

திருச்சி, துவாக்குடியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் ! கையும், களவுமாக சிக்கிய பில் கலெக்டர்

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (60). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய கதிர்வேல் துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் தனது விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சௌந்தர பாண்டியன், நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் ஜூலை -29 அன்று துவாக்குடி நகராட்சிக்கு சென்று பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு பில் கலெக்டர் சௌந்தரபாண்டியன் ஐம்பதாயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்றும், காலி மனைக்கான வரியை தனியாக கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார்.  லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ஆலோசனையின்படி, இன்று துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் சௌந்தரபாண்டியன்கதிர்வேலுவிடமிருந்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார், பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்