திருச்சி மாநகர் மற்றும் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் திருச்சி காந்தி மார்க்கெட் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உறையூர் குற்றப்பிரிவுக்கும், அரசு மருத்துவமனை இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவுக்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் உறையூர் சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கும், கரூர் மாவட்டம் பாலவிடுதி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தில்லைநகருக்கும், அரியலூர் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் இன்ஸ்பெக்டர் அஜீம், பொன்மலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நிர்மலா, கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமலர், அரியமங்கலம் குற்றப்பிரிவுக்கும், தில்லைநகர் குற்றப்பிரிவு ரத்தினா வள்ளி, செசன்ஸ் கோர்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், பொன்மலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தில்லைநகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் சிந்து நதி ஆகியோர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் என மொத்தம் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பிறப்பித்துள்ளார்.
Comments are closed.