Rock Fort Times
Online News

“நீட்” வினாத்தாள் லீக் ஆன விவகாரம்: 3 டாக்டர்கள் கைது…!

நீட் வினாத்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று (18-07-2024) நடக்கவுள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணையில் பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பீகார் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேரை கைது செய்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்