Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை பவர் கட்!

திருச்சி, அம்பிகாபுரம், மன்னார்புரம் மற்றும் கே சாத்தனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ( ஜூலை 6ம் தேதி ) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பிகாபுரம் மற்றும் மன்னார்புரம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம்,ரயில் நகர், நேருஜி நகர், ராணுவ காலனி, பாப்பா குறிச்சி,கைலாஷ் நகர் மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை,கொட்டப்பட்டு,  அரியமங்கலம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாத்தனூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான, இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்எம்எஸ்சி காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், எல்ஐசி காலனி, ஓலையூர், இச்சிக்காமலைப்பட்டி, மன்னாரர் புரத்தின் குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றில் மின்விநியோகம் இருக்காது. இதேபோல மன்னார்புரம் துணை மின்நிலையத்திலிருந்துமின் வினியோகம் பெறும் பகுதிகளான டிவிஎஸ் டோல்கேட், முடுக்குப்பட்டி, சுப்பிரமணியபுரம், ரஞ்சிதபுரம்,செங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் காலை10 மணி முதல் பகல் 1மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்