திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. ரோடு பகுதியில் ஆபீஸர்ஸ் கிளப் இயங்கி வந்தது. மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வந்த இந்த கிளப்பில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுப்பினராக இருந்தனர். வாடகை பாக்கி காரணமாக கடந்த ஆண்டு இந்த ஆபீஸர்ஸ் கிளப் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட விளையாட்டுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு டென்னிஸ் கோர்ட் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடத்து வந்தன. இந்த நிலையில் மாவட்ட விளையாட்டு அதிகாரி மற்றும் அலுவலர்கள் அங்கு சென்றபோது சீல் உடைக்கப்பட்டு இருந்தது.இதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து,தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சீல் உடைக்கப்பட்டு அங்கு பழைய செய்தித்தாள்கள் எரிக்கப்பட்டு கிடப்பது தெரியவந்தது.இதனால் சமூக விரோத செயல்கள் அங்கு நடந்திருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதுகுறித்து,கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.