Rock Fort Times
Online News

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்து: பல பயணிகள் படுகாயம்…!

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. இதில், 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளதாகவும் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்ததை மட்டும் மேற்கு எல்லை ரயில்வே மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அங்கு, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்