Rock Fort Times
Online News

திருச்சி,உறையூரில் துணிகரம் ; வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – மர்ம ஆசாமிக்கு வலை!

திருச்சி, உறையூர் குழுமணி மெயின் ரோடு ஐலாண்டேஸ்வரி நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் பாபு (வயது 45. ) இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனியார் வனஸ்பதி நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அகிலாண்டேஸ்வரி நகர் மக்கள் நல சங்க செயலாளராக தற்போது இருந்து வருகின்றார். இவருடைய மனைவி காஞ்சனா. இவர் திருச்சி அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றார்.
இவர்களுக்கு கீர்த்திகா (வயது 23) என்ற மகள் உள்ளார். வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டனர்,மகள் தித்திகா 11 மணியளவில் ஆடிட்டிங் கோச்சிங் சென்டருக்கு சென்று விட்டார். மீண்டும் வேலை முடிந்து மாலை 5 மணி அளவில் தீபிகா தனது வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தந்தை சதீஷ் பாபுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சதீஷ் பாபு அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்த போது, ஷோகேஸ் ராகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 பவுன் நகைகள் திருடப்பட்டுருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து,உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, காவல்துறையினர் திருடு போன நகைகள் குறித்தும், திருடிய நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். உறையூரில் பட்டப் பகலில்,வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகைகள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்