Rock Fort Times
Online News

எம்.பி தேர்தலில் அதிக ஓட்டு – திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோதிரம் பரிசு!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் அதன் முதன்மை செயலாளர் துரை.வைகோ போட்டியிட்டார்.அதிமுக – திமுக- அமமுக – நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவியது.தேர்தல் முடிவுகள் கடந்த 4ம்தேதி வெளியானது. இதில் 5,42,213 வாக்குகள் பெற்று திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரான துரை வைகோ வெற்றிபெற்றார்.இந்நிலையில் திமுக வேட்பாளரான துரை.வைகோ வெற்றிக்காக தீவிரமாக தங்களது பகுதியில் களப்பணியாற்றி அதிக வாக்குகள் பெற்றுக்கொடுத்த திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகளான மண்டல தலைவர் மு .மதிவாணன், மார்க்கெட் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மருந்து கடை மோகன் ,காட்டூர் பகுதி செயலாளர் ஓ.நீலமேகம், பொன்மலை பகுதி செயலாளர் இ.எம் தர்மராஜ்,கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட 21 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார்.அருகில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் பொய்யாமொழி உள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்