Rock Fort Times
Online News

கோவையில் நாளை நடைபெறும் திமுக முப்பெரும் விழா! திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் அறிக்கை!

கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு, 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என திமுக சார்பில் முப்பெரும் விழா நாளை (ஜூன் 15 ) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவில் திரளாக பங்கேற்க வருமாறு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் இருக்கு அமைச்சரும் மாவட்ட செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்., நாளை மாலை 4 மணி அளவில் கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் – கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும், முத்தமிழ் அறிஞர் – கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, 40 தொகுதிகளை வென்றெடுத்த கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா என கழக முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர் – நிர்வாகிகள் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்