ஆந்திராவில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்பு கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.அப்போது மேடையில் நடந்து சென்ற முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை அழைத்த அமித்ஷா, மிகவும் கண்டிப்புடன் கை அசைத்தபடி ஏதோ பேசினார்.இது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அமித்ஷா தமிழிசையை நேரில் அழைத்து கண்டித்தார் என பதிவிட்டு நெட்டிசன்களும் அதிகமாக ஷேர் செய்தனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் தமிழிசையிடம் கேட்டபோது பதில் ஏதும் கூறாமல் சிரித்தபடியே காரில் ஏறி சென்றார். அமித்ஷா கண்டித்ததாக செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் புதுச்சேரி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.