மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு பாஜக, நாம் தமிழர் கட்சி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பா.ஜ.க.வைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுக் காட்டட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க.போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி அதிக வாக்குகள் பெற்றுவிட்டால், தனது கட்சியையே கலைத்து விடுகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், தேர்தல் முடிவில் பாஜக 11 தொகுதிகளில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி எந்தத் தொகுதியிலும் 2-ம் இடத்தைப் பிடிக்கவில்லை. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 3-ம் இடத்தை பெரும்பாலான தொகுதிகளில் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியை விஞ்சி, பாஜக அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.