Rock Fort Times
Online News

முடங்கியது மின்வாரிய இணையதளம் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு!

மின் வாரிய இணையதளம் நேற்று முடங்கியது .
மின்வாரிய இணையதளம் சேவைகள் தொடர்ந்து முடங்கியதால், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டசேவைகளை மேற்கொள்ள முடியாமல், பலரும் அவதிக்கு உள்ளாகினர்…

மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு, மின் வாரியத்தின், www.tangedco.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேற்று மதியத்தில் இருந்து,… அந்த இணையதள சேவை முடங்கியது….

இதுகுறித்து, மின் வாரிய ஐ.டி., பிரிவு தலைமை பொறியாளரிடம் கேட்டபோது, www.tangedco.org என்ற மற்றொரு இணையதளம் வழக்கம் போல் இயங்குகிறது’ என்றார். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த இணைய தளம் முடக்கம் குறித்து,… எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை….

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்