திருச்சி மணிகண்டம்
கண்டி நாதாலயன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26).
இவர் அந்தப் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா
போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக மணிகண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 14 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள், 13 கிலோ விமல் பாண்ட் மசாலா உள்ளிட்ட மொத்தம் 40 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் மோகன் ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.48 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
Prev Post
