டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் உங்கள முடிவுகளை ttps://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
